கார்த்தி சிதம்பரம் கைது | Oneindia Tamil

2018-02-28 7,662

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முலீடுக்கான அனுமதி பெற்று தந்ததில் முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐ கைது செய்தது. ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் கமிஷன் வாங்கியதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே கார்த்திக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.


Karthi Chidambaram arrested in Chennai airport in INX media by CBI.

Videos similaires